டிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியை பாராட்டும் வகையில், நாட்டின் மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் வெற்றிகள் பற்றி உயர்வாகப் பேசினார் டிரம்ப்.


அதில் சில அம்சங்கள் பற்றி நாம் ஆய்வு செய்தோம்.


1. டிரம்ப் கூறியது: ''நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்தின் அளவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.''


கண்டறிந்த உண்மை நிலை: இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பார்த்தால் அதிபர் டிரம்ப் சொன்னது சரி. ஓராண்டில் ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது.


2000வது ஆண்டில் இந்தியாவின் ட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 477 பில்லியன் டாலர்களாக இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) தெரிவித்துள்ளது. 2019ல் இது 2,940 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


2000 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இது 6.2 மடங்கு அதிகரிப்பாகும்.


பிரதமர் மோதி, இந்தியாவின் உற்பத்தித் துறையை வளர்ப்பதற்கு அளித்த உறுதிமொழியை உண்மை அறியும் குழு முன்னர் ஆய்வு செய்தது.


சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றின்படி, 2019ல் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது